கபாலி படத்தில் 2 வித தோற்றத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி!…
சென்னை:-‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி நடிக்கும் புதிய படம் ‘கபாலி’. பா.ரஞ்சித்
இயக்குகிறார். ராதிகா ஆப்தே ஹீரோயின். இதில் ரஜினியின் தோற்றம் எப்படி
இருக்கும் என்று பட டைட்டில் வெளியானவுடன் இணைய தளத்தில் ரசிகர்கள் புதுவித
டிசைன்களில் ஸ்டில் வடிவமைத்து வெளியிட்டிருந்தனர். அது ரஜினியின்
பார்வைக்கு சென்றது.
தாதாவை பற்றிய கதை என்பதால் அதற்கேற்ப தோற்றமும் சற்று
முரட்டுத்தனமாக இருக்கவேண்டும் என்று யூனிட்டார் பேசி இருந்தனர். பலவித
கெட்டப்கள் கம்ப்யூட்டரில் வடிவமைக்கப்பட்டது. அவற்றை ரஜினியின் பார்வைக்கு
அனுப்பி வைத்தனர்.தர்மதுரை படத்தில் ரஜினி பெப்பர்-சால்ட் தோற்றத்தில்
ஏற்கனவே நடித்திருந்தார்.
அதுபோல் ஒரு கெட்டப் ரஜினிக்கு
பிடித்திருந்தது. ரசிகர்களும் பெப்பர்-சால்ட் தோற்றத்தில் ரஜினியின்
ஸ்டில்களை டிசைன் செய்து வெளியிட்டதால் அதுவும் ரஜினியின்
விருப்பத்துக்கும் ஒத்தப்போனதால் அந்த தோற்றம் தேர்வு செய்யப்பட்டது.
அதுபோல் மேக்அப் அணிந்து சமீபத்தில் ஏவிஎம் ஸ்டுடியோவில் நடந்த போட்டோ
ஷூட்டில் ஸ்டில்கள் எடுக்கப்பட்டன.
இதில் ராதிகா ஆப்தேவுடன் காம்பினேஷன்
காட்சிகளும், மகளாக நடிக்கும் தன்ஷிகாவுடனும் ரஜினி பங்கேற்ற ஸ்டில்
எடுக்கப்பட்டன. தவிர சிறுமியை ரஜினி கைப்பிடித்து அழைத்து வரும் இளமை தோற்ற
ஸ்டில்களும் எடுக்கப்பட்டது. அந்த ஸ்டில்கள் வெளியிடப்படாமல் சஸ்பென்ஸாக
வைக்கப்பட்டிருக்கிறது. வரும் செப்டம்பர் மாதம் 17ம் தேதி படப்பிடிப்பு
தொடங்க திட்டமிடப்பட்டிருக்கிறது.

Post a Comment