Header Ads

விஜய் 59 படம் பற்றி வேகமாக பரவிய வதந்தி.. முற்றுப்புள்ளி வைத்த அட்லி!!

புலி படத்தை அடுத்து விஜய் இயக்குநர் அட்லி இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. விஜய்யின் 59-வது படமான இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்ஸன் நடிக்கின்றனர்.


தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிராகஷ் இசையமைக்கிறார். இது அவர் இசை அமைக்கும் 50-ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் தான் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. அதற்குள் இப்படம் குறித்து பல வதந்திகள் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன.

ஆரம்பத்தில்  இப்படம் மணிரத்னம் தயாரித்து, திரைக்கதை எழுதிய சத்ரியன் படத்தின் தழுவல் என்று சொல்லப்பட்டது. ஆனால் படக்குழு இல்லை என்று கூறினர். இந்த நிலையில் தான் சமீபத்தில்  விஜய் 59 படம் சத்ரியன் படத்தின் கதைதான் என்றும், கதை சத்ரியன் படம் போல் இருந்தாலும் கதாபாத்திரங்கள் வித்தியாசப் படும் என்றும் வதந்திகள் பரவியது.

மேலும் இயக்குநர் மகேந்திரன் கொடுரமான வில்லனாக இல்லாமல் புத்திசாலியான வில்லனாக இருப்பார் என்றும், இன்றைய காலகட்டத்துக்கு ஏற்றார் போல் அட்லியின் திரைக்கதை வலிமையானதாக உள்ளது என்றும் வதந்திகள் பரவியது.  இதுகுறித்து படக்குழு விளக்கம் ஏதும் தராததால் இந்த செய்தி பூதாகரமாக பரவியது.

இந்நிலையில் தற்போது இச்செய்தியை இயக்குநர் அட்லீ திட்டவட்டமாக மறுத்துள்ளாராம். மேலும் ‘விஜய் 59′ படத்தின் கதை எந்தவொரு படத்தின் காப்பியும் இல்லை என அவர் உறுதியாக கூறியுள்ளாராம். இப்படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் அக்டோபர் முதல் வாரம் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

No comments

Powered by Blogger.