பாவனா இப்படி இறங்கிட்டாங்களே..?
மலையாளத் திரையுலகில் இருந்து ’சித்திரம் பேசுதடி’ படம் மூலம் தமிழ்
திரையுலகிற்கு அறிமுகமானவர் பாவனா. அதைத்தொடர்ந்து தீபாவளி, ஜெயம்கொண்டான்,
அசல் உட்பட ஒரு சில படங்களில் நடித்தார்.
அசல் படத்திற்கு பிறகு இவருக்கு பெரிதாக பட வாய்ப்புக்கள்
கிடைக்கவில்லை.
இதனால் மீண்டும் மலையாளத்திலேயே கவனம் செலுத்த
ஆரம்பித்துள்ளார். தற்போது அங்கும் அவருக்கு வாய்ப்புகள் குறைந்துள்ளதால்
ஐட்டம் டான்ஸ் ஆட ஒப்புக்கொண்டு வருகிறார்.
மலையாளத்தில் ‘ஹலோ நமஸ்தே’ படத்தில் தற்போது நடித்து முடித்துள்ள பாவனா,
தற்போது ஆசிப் அலி நடித்துள்ள ‘கோஹினூர்’ படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு
ஐட்டம் டான்ஸ் ஆடியிருக்கிறார். சமீபத்தில் நடைபெற்ற இந்தப்படத்தின் ஆடியோ
ரிலீசில் கலந்துகொண்ட பாவனா, இந்தப்படத்தில் நானும் ஒரு முக்கிய
பொறுப்பேற்று இருக்கிறேன் என கூறினார்.
அப்போதே ஒரு சின்ன சந்தேகம் தோன்றத்தான் செய்தது. காரணம் படத்தின்
கதாநாயகியாக நடிப்பவர் அபர்ணா வினோத் என்பவர். பின் எப்படி பாவனா டான்ஸ் ஆட
ஒப்புக்கொண்டார் என்றால், படத்தின் ஹீரோவான ஆசிப் அலியுடன் ஏற்கனவே இரண்டு
படங்களில் ஜோடியாக நடித்துள்ளார் பாவனா. இந்தப்படத்தை ஆசிப் அலியே
தயாரிப்பதால், அவரது வேண்டுகோளுக்காக ஒரே ஒரு பாடலில்
ஆடிக்கொடுத்துள்ளாராம் பாவனா.

Post a Comment