Header Ads

நயன்தாராவை மாட்டிவிட்ட தயாரிப்பாளர்.. செம்ம கடுப்பில் நயன்..!

தமிழில் நம்பர் 1 நடிகையாக வலம் நயன்தாரா முதன் முறையாக மாயா என்ற பேய் படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் வரும் 17-ம் தேதி ரிலீசாக உள்ளது. தெலுங்கிலும் ’மயூரி’ என்ற பெயரில் இப்படம் ரிலீசாக இருக்கிறது. இந்த நிலையில் தெலுங்கில் இப்படத்தை தயாரித்திருக்கும் தயாரிப்பாளர் சி.கல்யாண் படத்துக்கு வித்தியாசமான முறையில் ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைக்கும் விதமாக ஒரு பரிசுப்போட்டி ஒன்றை அறிவித்திருக்கிறார்.
 


அதாவது ‘மயூரி’ படத்தை யாராவது தியேட்டரில் தனியாக அமர்ந்து பார்த்து விட்டால் அவர்களுக்கு 5 லட்சம் ரூபாயை தருவேன் என்பது தான் அந்தப்போட்டி. அதோடு அவர் நிறுத்தியிருந்தால் பரவாயில்லை. நயன்தாராவின் கோபத்துக்கு ஆளாகியிருக்கமாட்டார். அந்த 5 லட்சம் ரூபாயை ஜெயிப்பவர்கள் படத்தின் நாயகி நயன்தாரா கையால் வாங்கிக் கொள்ளலாம் என்று அறிவித்துவிட்டார்.

அவ்வளவுதான் இந்த விஷயம் நயன்தாரா காதுகளை எட்டவும்.. அவர் கோபப்பட்டு ‘முடியவே முடியாது என்று கண்டிஷனாக சொல்லிவிட்டாராம்’ ‘இப்படியெல்லாம் படத்தைவிளம்பரப்படுத்தி தாரேன்னு நான் உங்ககிட்ட அக்ரிமெட்ண்ட் எதுவும் போடல. இது என்னோட வேலையும் இல்லை.’ எனத் தயாரிப்பாளரிடம் கறாராக சொல்லியிருக்கிறார்நயன்தாரா..

No comments

Powered by Blogger.